ஏப்.2-ம் தேதி வரை 20 மாவட்டங்களில் அதிக வெப்பநிலை

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், சேலம், திருச்சி உள்ளிட்ட 20மாவட்டங்களில் ஏப்.2-ம் தேதி வரை வெப்பநிலை உயரக் கூடும்என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடைகாலம் நெருங்குவதையொட்டி பல்வேறு பகுதிகளில் வெப்பம் அதிகரித்து வருகிறது. 26-ம் தேதிகாலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான அளவுகளின்படி அதிகபட்சமாக சேலத்தில் 102 டிகிரி, வேலூர், பாளையங்கோட்டை, கரூர் பரமத்தி, மதுரை, தருமபுரி ஆகிய இடங்களில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மேலும் ஒரு வாரத்துக்கு வெப்பநிலை வழக்கத்தைவிட உயர வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று கூறியதாவது:

தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். மேலும், வடமேற்கு திசையிலிருந்து தமிழக பகுதியை நோக்கிதரைக்காற்று வீச சாத்தியக்கூறு உள்ளதால், வரும் ஏப்.2-ம்தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு வேலூர்,ராணிப்பேட்டை, திருப்பத்தூர்,திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர்,திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய 20 மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வழக்கத்தைவிட 5 டிகிரி வரை வெப்பநிலை உயரக் கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகபட்சமாக சேலத்தில் 102 டிகிரி, வேலூர், பாளையங்கோட்டை, கரூர் பரமத்தி, மதுரை, தருமபுரியில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே