தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக இன்று வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது.
அதன்படி 9 மாவட்டங்கள் தவிர மற்ற 27 மாவட்டங்களுக்கு திட்டமிட்ட தேதியில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது.
இதற்கிடையே, உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்படைந்துள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் களப்பணியில் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ள முதல் வேட்பாளர் பட்டியலை அதிமுக இன்று வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக அ.தி.மு.க. இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்ட ஊராட்சி வார்டு, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி, கிருஷ்ணகிரி, சேலம், அரியலூர், திருவாரூர், மதுரை புறநகர் கிழக்கு, தூத்துக்குடி வடக்கு மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.