வெப்பச்சலனத்தால் தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கடலூர், காஞ்சிபுரம் உட்பட 6 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்; கடலூர், காஞ்சிபுரம், நாகை, தஞ்சை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் பாளையத்தில் 6 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே