கோவையில் 2 பள்ளி குழந்தைகளை கடத்தி கொலை செய்த வழக்கில் மனோகரனுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கோவையில் சிறுவர், சிறுமியை கடத்தி கொலை செய்த வழக்கில் டிசம்பர் 2ம் தேதி மனோகரனை தூக்கிலிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆளுநரிடம் கருணை மனு அளிக்க அவகாசம் கோரி மனோகரன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.
இதனையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.
மேலும் தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.