காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

இது அடுத்த 24 மணிநேரத்தில் நிவர் புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்டங்களில் பேருந்து நிறுத்தப்படவுள்ளது, துறைமுக நகரங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு, மீட்புப்படையினர் தயாராக உள்ளனர்.

புதுவையில் இருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் 450 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 480 கிலோ மீட்டர் தொலைவிலும் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. 

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று பின்னர் தீவிர புயலாக மாறும்.

தீவிர புயலாக மாறிய பின் வரும் 25ஆம் தேதி மாலை கரையை கடக்கும் கரையை கடக்கும் போது 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் சில நேரங்களில் 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 6 மணி நேரமாக புயல் மணிக்கு 11 கிலோமீட்டர் தொலைவில் நகர்ந்து வருகிறது.

மாமல்லபுரத்திற்கு காரைக்காலுக்கு மிடையே புதுச்சேரியை ஒட்டிய பகுதியில் நிவர் புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே