ரேப் இன் இண்டியா பேச்சுக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று ராகுல் காந்தி திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.
இந்தியா, மேக் இன் இந்தியா இல்லை; ரேப் இன் இண்டியா என்று அழைக்க வேண்டிய நிலையில் நாடு இருப்பதாக ஜார்க்கண்ட் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார்.
அவரது இந்த பேச்சுக்கு பாஜகவும், பெண்கள் அமைப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். நாடாளுமன்றத்தில் பாஜக பெண் எம்.பி.க்கள் கடும் அமளியில் இறங்கினர்.
கூச்சல், குழப்பம் ஈடுபட்டதால் லோக்சபா தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
அப்போது பேசிய அமைச்சர் ஸ்மிருதி இராணி ராகுல் காந்திக்கு தண்டனை அளிக்க வேண்டும் என்று ஆவேசமானார்.
இந்நிலையில் தமது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று ராகுல் காந்தி திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.
அவர் மேலும் கூறியதாவது,
- ரேப் இன் இந்தியா என நான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்.
- டெல்லியை பாலியல் வன்கொடுமைகளின் தலைநகரம் என்று பிரதமர் மோடி விமர்சித்தார்.
- அந்த காட்சிளை நான் வைத்திருக்கிறேன்.
- அதை ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுவேன்.
- அசாம் போராட்டங்களை திசை திருப்ப இது பாஜகவின் திட்டமிட்ட நாடகம்.
- இதில் பாஜக நாடகமாடி வருகிறது என்றார்.