ரேப் இன் இண்டியா என்று விமர்சித்த ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பாஜக பெண் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
அண்மையில் இந்தியாவானது மேக் இன் இண்டியா என்பதற்கு பதிலாக ரேப் இன் இண்டியா என்று ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்திருந்தனர்.
இதற்கு ஆதரவு, எதிர்ப்பு என கலவையான கருத்துகள் வெளிப்பட்டன.
இந்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடியதும் பாஜக பெண் எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கடும் கண்டனம் எழுப்பினார்.
அவையில் கடும் ஆக்ரோஷத்துடன் காணப்பட்ட அவர், இந்திய பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட வேண்டும் என்று ஒரு தலைவர் பேசியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
ஒரு தலைவர் நாட்டு மக்களுக்கு இப்படியா ஒரு செய்தியை சொல்வது? அவருக்கு தண்டனை கொடுக்க வேண்டும்; மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
தொடர் அமளி காரணமாக லோக்சபா, ராஜ்யசபாவில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அமைதி நிலவாததால் லோக்சபா தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.