ராகுல் திராவிட் மகன் இரட்டை சதம்..!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் விளையாட்டு வீரரான ராகுல் திராவிடின் மகன் சமித், U-14 கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்து சாதனை நிகழ்த்தி இருக்கின்றார்.

கொல்கத்தாவில் நடைபெற்ற 14 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான, இந்திய அளவில் நடத்தப்படுகின்ற மண்டலங்களுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் வைஸ்-பிரசிடென்ட் லெவன் மற்றும் தார்வாத் மண்டல அணிகள் மோதியிருக்கின்றன.

ராகுல் டிராவிட் மகன் சமித், வைஸ்-பிரசிடென்ட் லெவன் என்கின்ற மண்டல அணிக்காக விளையாடி இருந்தார்.

அவர் 256 பந்தில் 22 பவுண்டரிகளை எடுத்து இரட்டை சதம் அடித்து, சாதனை நிகழ்த்தினார்.

மேலும் தனது 2-வது இன்னிங்சிலும், ஆட்டத்தை இழக்காமல் 94 ரன்கள் சேர்த்து அசத்தினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே