பெசன்ட்நகர் கடற்கரையில் பொதுமக்களுக்கு போலீசார் அனுமதி மறுப்பு..

சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் என சமூகவலைதளங்களில் தகவல் பரவியதால் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

அந்தப் போராட்டத்தை எதிர்த்து தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

நாளை தி.மு.க சார்பில் மாநிலம் தழுவிய அளவில் போராட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று மாலையில் சென்னையிலுள்ள பெசன்ட் நகரிலுள்ள கடற்கரையில் போராட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் பரவின.

அதனையடுத்து காவல்துறையினர் பெசன்ட் நகருக்கு வந்த பொதுமக்களை கடற்கரைக்குள் அனுப்பாமல் திருப்பி அனுப்பினர்.

ஞாயிற்றுகிழமை பெசன்ட் நகர் கடற்கரைக்கு ஏராளமான பொதுமக்கள் வருகை தருவார்கள். அவர்களைக் காவல்துறையினர் திருப்பி அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் சமூக வலைதளங்கள் மூலம் ஒருங்கிணைந்து ஒன்று திரண்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே