இந்திய அணிக்கு 316 ரன்கள் இலக்கு

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 315 ரன்கள் குவித்துள்ளது.

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெற்றுவருகிறது.

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க வீரர்களாக ஈவின் லீவிஸ், ஷாய் ஹோப் களமிறங்கினர்.

லீவிஸ் 21 ரன்களிலும், ஹோப் 42 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்ததாக களமிறங்கிய ரோஸ்டன் சேஷ் 38 ரன்களிலும், ஹெட்மெயர் 37 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்ததாக ஜோடி சேர்ந்த நிக்கோலஸ் பூரான், பொல்லார்ட் இணை இந்திய அணியின் பந்து வீச்சை சிதறடித்தனர்.

அதிரடியாக ஆடிய பூரான் 64 பந்துகளில் 89 ரன்கள் குவித்தார். பொல்லார்ட் 51 பந்துகளில் 74 ரன்கள் குவித்தார். இந்த இணை 130 ரன்களைக் குவித்தது.

ஆட்டநேர இறுதியில் 5 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் குவித்தனர். இந்திய அணியின் சார்பில் நவ்தீப் சைனி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே