தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய (சனிக்கிழமை) 2-வது ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
டாஸ் வென்ற சென்னை கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.
சென்னை அணியில் பியூஷ் சாவ்லாக்குப் பதில் கேதார் ஜாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தில்லியில் மாற்றம் எதுவும் இல்லை.