கொரோனா தடுப்புக்கு ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதி!

கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து வாடுவோருக்கு ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே இந்த நெருக்கடியான சூழ்நிலையை சமாளிக்க நிதி உதவி அளிக்குமாறு மக்களிடம் மத்திய, மாநில அரசுகள் கோரிக்கை வைத்திருந்தன.

அதற்கேற்ப கொரோனா தடுப்பு பணிகளுக்கு திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

அந்தவகையில் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் ரூ. 3 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

பி.வாசு இயக்கும் அந்த படத்தில் ரஜினிகாந்தின் அனுமதியுடன் நடிக்க இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

சந்திரமுகி இரண்டாம் பாகத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்றும், அவர்கள் கொடுத்த முன்பணமாக மூன்று கோடி ரூபாயை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தருவதாக தெரிவித்துள்ளார்.

அதில்,

  • பிரதமர் நிவாரண நிதி உதவியாக ரூ.50 லட்சம்,
  • தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் மற்றும்
  • படப்பிடிப்பு ரத்தால் பாதிக்கப்பட்டு வேலை இழந்த சினிமா தொழிலாளர்களுக்கு ரூ.50 லட்சம்,
  • நடன இயக்குநர்கள் சங்கத்துக்கு ரூ.50 லட்சம்,
  • மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 லட்சம்,
  • வாழ்வாதாரத்தை இழந்துவாடும் தினக்கூலி
  • தொழிலாளர்களுக்கு ரூ.75 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே