கத்தார் ஓபன் டென்னிஸ்: சானியா ஜோடி அரையிறுதிக்கு தகுதி

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரில் சானியா மிர்சா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.

தோஹாவில் நடைபெற்று வரும் கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, ஸ்லோவேனியாவின் ஆண்ட்ரேஜா கிளெபக் ஜோடி தங்களது முதல் சுற்றில் உக்ரைனின் நதியா கிச்செனோக், லுட்மிலா கிச்செனோக் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் சானியா ஜோடி 6-4 6-7, 10-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்திலிருந்த கனடாவின் கேப்ரியேலா டப்ரௌஸ்கி, ரஷியாவின் அனா பிலின்கோவா இணையை 6-2, 6-0 என்ற கணக்கில் வீழ்த்தியது சானியா மிர்சா ஜோடி. இதனையடுத்து சானியா ஜோடி கதார் ஓபன் போட்டியின் இரட்டையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறியது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே