லீச், ரூட் மேஜிக்கில் சிக்கிய இந்திய பேட்ஸ்மேன்கள்

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் விளையாடி வருகிறது. பகல் இரவு ஆட்டமாக நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி 112 ரன்களுக்கு நேற்று அவுட்டானாது. தொடர்ந்து இந்திய அணி நேற்று முதல் இன்னிங்க்ஸை தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 99 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. 

இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் ரஹானே, ரோகித், பண்ட், வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல் என அடுத்தடுத்த பேட்ஸ்மேன்கள் அவுட்டாகினர். இங்கிலாந்து அணிக்காக ஜேக் லீச் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அந்த அணியின் கேப்டன் ரூட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

ரோகித் அதிகபட்சமாக இந்திய அணிக்காக 66 ரன்களை குவித்திருந்தார். 145 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இந்திய அணி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே