புதுச்சேரியில் 12 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் திமுக போட்டியிடும் 13 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 12 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் மட்டும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள ஒரு தொகுதிக்கான வேட்பாளர் பிறகு அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக வெளியிட்டிருக்கும் வேட்பாளர் பட்டியலில், காலாப்பட்டு – எஸ். முத்துவேல், காரைக்கால் தெற்கு தொகுதியில் நாஜிம், திருப்புவனை (தனி) தொகுதியில் ஏ. முகிலன், நிரவி திருப்பட்டினத்தில் எம். நாகதியாகராஜன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு வேட்பாளர் பட்டியல்..

திமுக போட்டியிடும் பாகூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு 30 தொகுதிகள் உள்ளன. இதில் காங்கிரஸும் – திமுகவும் கூட்டணி அமைத்து பல கட்டப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

கூட்டணிக்கு யாா் தலைமை தாங்குவது என்பது குறித்து பலகட்ட பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இந்நிலையில் திமுக – காங்கிரஸ் இடையே அண்ணா அறிவாலயத்தில் கடந்த வியாழக்கிழமை உடன்பாடு ஏற்பட்டது.

இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினும், புதுச்சேரி காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியனும் கையெழுத்திட்டனா்.

காங்கிரஸ் 15, திமுக 13, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்குத் தலா 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டன.

புதுச்சேரியில் திமுக – காங்கிரஸும் கிட்டத்தட்ட சம அளவில் தொகுதிகளைப் பிரித்துக்கொண்டுள்ளன.

அதிக இடங்களில் எந்தக் கட்சி வெற்றிபெறுகிறதோ அந்தக் கட்சியின் ஆட்சி அமைப்பது என்கிற முடிவுடன் திமுக – காங்கிரஸ் தோதலைச் சந்திக்கிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே