நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததை அடுத்து முதலமைச்சர் பதவியில் இருந்து நாராயணசாமி ராஜினாமா செய்தார்.

தனது ராஜினாமா கடிதத்தை துணை நிலை ஆளுநர் தமிழிசையிடம் நாராயணசாமி வழங்கினார்.

பெரும்பான்மை இருக்கிறது என்பதை சபாநாயகர் ஏற்க மறுத்ததால் ராஜினாமா செய்வதாக நாராயணசாமி விளக்கம் அளித்துள்ளார்.

நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க அனுமதி அளிக்கக்கூடாது என்ற எங்கள் கோரிக்கையை சபாநாயகர் ஏற்காததால் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ததாக கூறினார்.

மேலும் எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் தக்க தண்டனை அளிப்பார்கள் எனவும் நாராயணசாமி ராஜினாவுக்கு பின்னர் தெரிவித்தார்.

முன்னதாக, புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்கக்கோரி சட்டப்பேரவை கூட்டம் நடந்தது. 

இதில் புதுச்சேரி அரசு பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை என சபாநாயகர் அறிவித்தார். இதனால் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்தது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே