கேரளா: திருவனந்தபுரம் பகுதியில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறியுள்ளது – முதல்வர் பினராயி விஜயன்

கேரள மாநிலத்தின் சில இடங்களில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறிவிட்டது என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம் மாவட்டத்தின் பூனதுரா, புலவிலா பகுதிகளில் சமூக பரவல் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கேரளாவில் இன்று புதிதாக 791 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து கொரோனா நோய்த் தொற்றில் இருந்து 133 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் இன்று ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார்.

இந்தியாவிலேயே முதல்முறையாக தங்களது மாநிலத்தில் ‘கொரோனா வைரஸ் சமூகப் பரவல் நிலையை மிகவும் நெருங்கிவிட்டதாக’ கேரள அரசு தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் உடனடியாக குறைவதற்கு வாய்ப்பில்லாத காரணத்தினால், தொற்றுநோய் தடுப்பு தொடர்பான சட்டத்தை  2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை நீட்டித்து அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் முதல் பகுதியாக, அந்த மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் கடந்த வாரம் முழுவதும் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா உறுதிசெய்யப்படாதவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த பல மருத்துவர்களுக்கு சமீபத்திய நாட்களில் கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கேரளாவை பொறுத்தவரை, கோவிட்-19 நோயாளிகளில் 30-50 சதவீதத்தினருக்கு எவ்வித அறிகுறியும் காணப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே