டெல்லியில் முகாம்களில் உள்ள தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துதர வேண்டும் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
தில்லி மாநாட்டில் பங்கேற்க சென்ற தமிழகத்தை சேர்ந்தவர்களில் 183 எய்ம்ஸ் உட்பட 4 மருத்துவமனைகளிலும், 376 பேர் தனிமை முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
எனவே, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தில்லி முகாமில் தங்கியிருக்கும் தமிழர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து தில்லி மாநாட்டில் பங்கேற்ற 559 பேருக்கு உரிய உணவு போன்றவற்றை வழங்க வேண்டும் என தில்லி அரவிந்த் கேஜரிவாலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
ரம்ஜான் நோன்பு தொடங்க உள்ளதால் 559 பேருக்கும் தேவையான உணவு, மருந்து வழங்க வேண்டும் என்றும் தனிமைப்படுத்தப்பட்டோரில் நீரிழிவு போன்ற பாதிப்பு உள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.