கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் நான்கு பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை பரிசோதனை முறையில் நடத்தப்பட்டதில், முடிவு திருப்திகரகமாக இருந்ததாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று 12 மணியளவில் காணொலி மூலம் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது, தில்லியில் பரிட்சார்த்த முறையில் நான்கு நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. முடிவு திருப்திகரமாக உள்ளது.
முதற்கட்ட சோதனையில் பிளாஸ்மா சிகிச்சை நம்பிக்கை அளிப்பதாகவே உள்ளது. இன்னும் 2 அல்லது 3 நாள்களுக்கு மேலும் சில பரிசோதனைகள் நடத்தப்படும்.
பரிசோதனைகள் மூலம் சிகிச்சை பலனளிப்பது உறுதி செய்யப்பட்டதும், மத்திய அரசிடம், பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்வதற்கு அனுமதி பெறப்படும்.
எனவே, கரோனா தொற்று பாதித்து சிகிச்சையின் பலனாகக் குணமடைந்தவர்கள் அனைவரும் தாமாக முன் வந்து பிளாஸ்மாவை தானமாக அளிக்க முன் வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.