அனைத்து அரசு துறைகளில் புதிய பணியிடங்கள் ஏற்படுத்த தடை! – தமிழக அரசு

தமிழகத்தில் புதிய பணி நியமனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு விழாக்களில் செலவுகளை குறைக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு சார்ந்த விழாக்களில் செலவினங்களை குறைக்க அரசு அலுவலகங்களுக்கான மொத்த செலவுகளில் 20 சதவீதத்தை குறைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது :

 • சிக்கன நடவடிக்கையாக, அரசு சார்பில் நடக்கும் விழாக்களில் சால்வைகள், பூங்கொத்துகள், நினைவு பரிசுகள் வழங்குவது தவிர்க்க வேண்டும்
 • அரசு செலவிலான விருந்து நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. அரசு அலுவலகங்களின் செலவினங்கள் குறைக்கப்படுகிறது.
 • மேஜை, நாற்காலிகள் உள்ளிட்ட அலுவலக தேவைகள் வாங்குவது 50 சதவீதம் குறைக்கப்பட வேண்டும். 
 • சுகாதாரத்துறை, தீயணைப்புத்துறை மட்டுமே உபகரணங்கள் கொள்முதல் செய்ய வேண்டும்.
 • அரசு உயரதிகாரிகள் உயர் வகுப்பு விமானங்களில் பயணம் செய்ய தடை விதிக்கப்படுகிறது. ரயில் கட்டணத்திற்கு இணையான தொகைக்கு மட்டுமே அவர்கள் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
 • அரசு செலவில் வெளிநாட்டு பயணத்திற்கு தடை விதிக்கப்படுகிறது. வெளிமாநில பயணத்திற்கும் தடை விதிக்கப்படுகிறது.
 • கட்டாய பயணங்களை மட்டுமே அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.
 • விளம்பர செலவுகளை 25 சதவீதம் குறைத்து கொள்ள வேண்டும்.
 • அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களை உருவாக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. செலவின குறைப்புக்காக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 • அலுவலக பயன்பாட்டில் மொத்தம் 20 சதவீத செலவுகள் குறைக்கப்படுகிறது.
 • புதிய கம்ப்யூட்டர் மற்றும் பாகங்கள் வாங்க தடை விதிக்கப்படுகிறது. பழைய மற்றும் செயல்படாதவற்றை மட்டும் மாற்றி கொள்ளலாம். இதற்காக ஒதுக்கப்பட்ட தொகையில் 25 சதவீதம் குறைக்கப்படுகிறது.
 • அரசு அதிகாரிகளின் தினப்படி 25 சதவீதம் குறைக்கப்படுகிறது. நிர்வாக ரீதியான பணி மாற்றத்திற்கு மட்டுமே அனுமதி
 • அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பயணப்படி மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.
 • அரசு அலுவலகங்களில் புதிதாக கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே