மாஸ்க் அணிந்திருந்தாலும் அடையாளம் காணும் ஆப்பிள் பேஸ் சென்சார்..!

தற்போது கொரோனா காலத்தில் பேஸ் மாஸ்க் பல நாடுகளில் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பேஸ் மாஸ்குடன் பேஸ் சென்சார் வேலை செய்ய தொழில்நுட்பத்தை உருவாகி வருகின்றன.

சீன செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் பேஸ் மாஸ்க் அணிந்திருந்தாலும் பேஸ் சென்சார் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ள நிலையில் தற்போது ஆப்பிள் நிறுவனமும் பேஸ் சென்சாரை பேஸ் மாஸ்க் அணிந்திருந்தாலும் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த உள்ளன.

சமீபத்தில் ஆப்பிள் அப்டேட்டில் ஆப்பிள் இந்த வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளது. இது வாடிக்கையாளர்களை அதிகமாகக் கவர்ந்துள்ளது. 

இதுதவிர ஆப்பிள் ஏபிஐ தொழில்நுட்பம் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு ஓர் புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.

இதன்மூலம் ஐபோனில் ப்ளூ டூத் ஆன்-ல் இருந்தால் கொரோனா வைரஸ் தாக்கம் கொண்டவர்கள் அருகே வந்தால் அலர்ட் சிக்னல் காண்பிக்கும்.

இவ்வாறு காண்பிப்பதன் மூலமாக கொரோனா பாதிப்பு உள்ளவர்களிடம் இருந்து தள்ளி இருக்க உதவும்.

இதற்காக ஆப்பிள் கூகுளுடன் ஓர் ஒப்பந்தம் இட்டுள்ளது. இது ஐபோன் பிரியர்களிடயே வைரலாகி உள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே