சென்னை கேகே நகரில் தனசேகரன்( 56 ) என்பவர் வசித்து வருகிறார் . இவர் திமுகவில் தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ளார்.
தனசேகரனின் வீட்டிலேயே அவருக்கு அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்தில் அமுதா (34 )என்ற பெண் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார்.
பணிப்பெண் அமுதா கருத்து வேறுபாடு காரணமாக கணவர் பொன்வேலை பிரிந்து வசித்து வருகிறார்.
குடும்ப தகராறு விரோதத்தில் இருந்த அமுதாவின் கணவர் அப்பெண்ணை தேடி அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு பேசுவது போல் நடித்து திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளால் அமுதாவை வெட்டியுள்ளார்.
அவர் சத்தம் போடவே அங்கிருந்த தனசேகரன் தடுக்க முயன்றுள்ளார். அப்போது அவருக்கும் கை மற்றும் தலையில் அரிவாள் வெட்டு விழுந்தது.
படுகாயமடைந்த தனசேகரன் வடபழனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமுதா கேகே நகர் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இருவருக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே இது தொடர்பான புகாரில் கேகே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பொன்வேலை தேடி வருகின்றனர்.
பொன்வேல் மட்டும் வந்து வெட்டினாரா? அவருடன் வேறு சிலர் வந்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.