பிரியங்கா காந்திக்கு பதிலாக “பிரியங்கா சோப்ரா ஜிந்தாபாத்” என கோஷமிட்ட காங்கிரஸார்!

பொதுக் கூட்ட மேடையில் பிரியங்கா காந்திக்கு பதிலாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.எல்.ஏ கோஷமிட்ட சுவாரஸ்ய நிகழ்வு டெல்லியில் அரங்கேறியுள்ளது.

டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சோப்ரா, முன்னாள் எம்.எல்.ஏ சுரேந்தர் குமார் ஆகியோர் பங்கேற்ற பொதுக்கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் தலைவர்களை வாழ்த்தி பேசிய முன்னாள் எம்.எல்.ஏ சுரேந்தர் குமார் ஒரு கட்டத்தில் நீண்ட கால வாழ வேண்டும் என இந்தியில் ஜிந்தாபாத் என கோஷமிட்டார்.

அப்போது சோனியா காந்தி ஜிந்தாபாத், ராகுல் காந்தி ஜிந்தாபாத் என வரிசையாக கோஷமிட்ட அவர் திடீரென பிரியங்கா சோப்ரா ஜிந்தாபாத் என முழங்கினார். 

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு பதிலாக பிரியங்கா சோப்ரா தவறுதலாக வாழ்த்தியிருந்தார்.

அப்போது அருகில் இருந்த டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சோப்ரா அதிர்ச்சியில் உறைந்தார்.

பின்னர் சுதாரித்துக்கொண்ட முன்னாள் எம்.எல்.ஏ சுரேந்தர் குமார் தவறுதலாக கூறிவிட்டதாக கூட்டத்தில் பேசினார்.

பிரியங்கா சோப்ரா ஜிந்தாபாத் என தவறுதலாக சுரேந்தர் குமார் கூறினாலும் கூட நேற்று (டிசம்பர் 01) பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் பிறந்த நாளாக அமைந்துவிட்டது.

சுரேந்தர் குமார் பிரியங்கா சோப்ராவுக்கு ஜிந்தாபாத் கோஷமிட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பிரியங்கா சோப்ரா எப்போது காங்கிரஸில் சேர்ந்தார் என கேள்விகளுடன் சிலர் வேடிக்கையான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே