சேலம் அருகே தனியார் சொகுசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை சுங்கச்சாவடி அருகே இரு சொகுசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

சென்னையில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி தனியார் சொகுசு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுக்கொண்டிருந்தது.

அப்பேருந்து உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே சென்றுக்கொண்டிருந்த போது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த மற்றொரு தனியார் சொகுசு பேருந்து, திடீரென திரும்ப முயற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக இரண்டு பேருந்துக்களும் ஒன்றோடு ஒன்று பயங்கரமாக மோதிக்கொண்டன.

இதனால் ஏற்பட்ட விபத்தில் 28 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும், 16 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் சிலர், மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே