ரஷ்யாவில் இருந்து ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இந்தியா வந்தடைந்தது..!!

ரஷ்யா தடுப்பூசி ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதல் தொகுதி ஹைதராபாத் வந்து சேர்ந்தது.

இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை, அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தற்போது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அனுமதி அளித்துள்ள நிலையில், அவசரகால தேவைக்காக ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்தது.

இந்நிலையில், கொரோனாவிற்கு எதிரான ரஷ்யா தடுப்பூசி ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதல் தொகுதி ஹைதராபாத் வந்து சேர்ந்தது. 

இந்தியாவில் கொரோனா தீவிரம் அடைந்ததை அடுத்து 1.5 லட்சம் டோஸ் ஸ்புட்னிக் V ரஷ்யா வழங்கியது.

ரஷ்யாவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் ஸ்புட்னிக் -V தடுப்பூசிகள் பிரத்தியேக பெட்டகங்களில் வந்து சேர்ந்தன.

இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் 3-வது தடுப்பூசி ஸ்புட்னிக் -V என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே