டெல்லியில் நடைபெற்று வரும் கைவினை பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்ட பிரதமர் மோடி, தேநீருடன் சிற்றுண்டி அருந்தினார்.
டெல்லியின் ராஜ்பாத் பகுதியில் சிறுபான்மையினர் விவகார அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கைவினை பொருட்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் எதிர்பாராத விதமாக அங்கு சென்ற பிரதமர் மோடி கண்காட்சியை பார்வையிட்டார்.
கிட்டத்தட்ட 50 நிமிடங்கள் வரை கண்காட்சியில் செலவிட்ட பிரதமர் மோடி லிட்டி சோகா எனும் சிற்றுண்டியினை ருசித்தார்.
பின்னர் சிறுபான்மையினர் விவகாரத் துறை அமைச்சர் முக்தர் அபாஸ் நக்வியுடன் சேர்ந்து குல்கத் தேநீர் அருந்தினார்.
பிரதமர் மோடி கண்காட்சியை பார்வையிட்ட செய்தியறிந்து அப்பகுதியில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்தது.