முன்னாள் குடியரசு தலைவர் பிராணப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றமும் இல்லை என ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது. பிரணாப் முகர்ஜிக்கு வெண்டிலேட்டர் கருவி உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று இருப்பது 11ம் தேதி உறுதியானது. 84 வயதாகும் அவர் வழக்கமான சோதனைக்கான மருத்துவமனை சென்றார்.
அப்போது அவருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை செய்யப்பட்டதையடுத்து அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூளையில் ஏற்பட்ட கட்டிக்கு அறுவைசிகிச்சை மேற்கொண்ட நிலையில் கொரோனா பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் கடந்த ஒரு வாரத்தில் தன்னோடு தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் பிரணாப் கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் நேற்று பிரணாப் முகர்ஜி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனை தெரிவித்திருந்தது. தற்போது அவர் சுயநினைவின்றி இருப்பதாகவும், அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என தெரிவித்துள்ளது.