கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வை காணொலி மூலம் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 6-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்று அகழாய்வுப் பணிகளை அவர் துவக்கி வைத்தார்.

கீழடியில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் இதுவரை 5 கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுள்ளன.

முதல் மூன்று கட்ட அகழாய்வை மத்திய தொல்லியல் துறையினரும் நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல் துறையினரும் நடத்தினர்.

இதில் 2600 ஆண்டுகள் பழமையான 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் மற்றும் கட்டுமானங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்நிலையில் 6-ஆம் கட்டமாக இரண்டு ஏக்கர் பரப்பளவில் அகழாய்வுப் பணிகள் நடைபெற உள்ளன. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே