பாரதியாரின் கவிதைகளை மேற்கோள் காட்டி பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் ‘ சர்தார் வல்லபாய் பட்டேலின் 145-வது பிறந்தநாள் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து, குஜராத்தில் உள்ள வல்லபாய் பட்டேலின் சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.
பிரதமர் மோடி பட்டேலின் சிலைக்கு, மலர்தூவி மரியாதை செலுத்தி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பின், பிரதமர் மோடி உரையாற்றினார்.அப்பொழுது “மன்னும் இமயமலை யெங்கள் மலையே மாநில மீதிது போற்பிறி திலையே! இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறேஇங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே?பன்னரும் உபநிடநூ லெங்கள் நூலேபார் மிசை யேதொரு நூல்இது போலே? ” என்ற பாரதியாரின் கவிதையை மேற்கோள் காட்டி பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
ஏற்கனவே அயோத்தி ராமஜென்ம பூமி பூஜையில், தமிழில் கம்ப ராமாயணம் உள்ளிட்ட பல மொழிகளில் ராமாயணங்கள் உள்ளது என்று பிரதமர் மோடி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.