பிரதமர் மோடி பாராட்டியது மிகுந்த மகிழ்ச்சி – மதுரை சலூன் கடைக்காரர் மோகனின் மகள்

மதுரை மேலமடை பகுதியில் சலூன் கடை நடத்தி வருபவர் மோகன். முழு ஊரடங்கு அமலில் இருந்த காலத்தில், அவர் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள நெல்லைத்தோப்பு முழுவதுமே முடக்கப்பட்டது.

பெரும்பாலும் தினக்கூலித் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் அந்த பகுதியில் வாழும் மக்களின் பெருந்துயர் கண்டு, மோகன் சிறுசிறு உதவிகளை செய்து வந்தார்.

அதனையடுத்து, தனது மகளின் மேற்படிப்புக்காக பல வருடங்களாக சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த ரூ.5 லட்சம் பணத்தை தவிர, வேறு எதுவும் இல்லாமல் தவித்த போது, அவரது மகள் நேத்ரா அந்த பணத்தை எடுத்து உதவிடுமாறு கூற, மொத்த பணத்தையும் எடுத்து அந்த பகுதியில் வசித்து வந்த சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகை, மற்றும் காய்கறிகள் தொகுப்பை உரிய அனுமதி பெற்று வழங்கியிருக்கிறார் மோகன். 

அதனையடுத்து, மோகனுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகள் தெரிவித்துவந்தனர்.

குறிப்பாக, நடிகர் பார்த்திபனும் பாராட்டு தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், மான் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘ மதுரையில் சலூன் கடை வைத்திருக்கும் மோகன் என்பவர் அவரது மகளின் படிப்புச் செலவுக்காக வாழ்நாள் முழுதும் உழைத்து சேர்த்துவைத்திருந்த 5 லட்ச ரூபாய் பணத்தைக் கொண்டு ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருந்த ஏழைகளுக்கு செலவிட்டு உதவி செய்துள்ளார்.

அவருக்கு என்னுடைய பாராட்டுகள் என்றார்.

பிரதமர் மோடியின் பாராட்டு குறித்து பேசிய மோகனின் மகள் நேத்ரா, ‘பிரதமர் மோடி பாராட்டியது எங்களுக்கு பெருமையாக உள்ளது. எங்களது சேவை தொடரும். ஐ.ஏ.எஸ் ஆவதே என்னுடைய லட்சியம்’ என்று தெரிவித்தார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே