வரும் 25ம் தேதி புதுச்சேரி வருகிறார் பிரதமர் மோடி..!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் வரும் 25ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

புதுச்சேரி மாநில தேர்தல் பரப்புரையில் இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கும் நிலையில் பிரதமரும் வர உள்ளார்.

புதுச்சேரியில் நடைபெற உள்ள பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு பேச இருப்பதாக பாஜகவின் மாநில தலைவர் சாமிநாதன் தகவல் அளித்துள்ளார்.

இன்று ராகுல்காந்தி புதுச்சேரிக்கு வரவுள்ள நிலையில் பிரதமரின் வருகையும் தற்போது அறிவிக்கப்பட்டிருப்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது.

புதுச்சேரியில் தொடர்ந்து 4 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகல் காரணமாக தற்போது பெரும்பான்மை பிரச்சனை கிளம்பி இருக்கிறது.

இந்நிலையில் பாஜகவானது தங்களது கட்சியையும் ஆட்சியையும் பலப்படுத்துவதற்கான வேலைகளில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக பிரதமர் நரேந்திர மோடி 25ஆம் தேதி வருவது தற்போது உறுதியாகி இருக்கிறது.

அதேபோன்று அமித்ஷா புதுச்சேரி மாநிலமான காரைக்காலுக்கு அடுத்த மாதம் வருவதாக திட்டமிட்டுள்ளனர்.

அடுத்த மாதம் 2ஆம் தேதி அவர் காரைக்காலுக்கு வருவதற்காக ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

இருப்பினும் அந்த தேதி இன்னும் முடிவாகவில்லை. தற்போது பிரதமர் வருகையினுடைய தேதி முடிவாகியுள்ளது.

ஆகவே மோடி வருவதற்கு முன்பாகவே புதுச்சேரியினுடைய காங்கிரஸ் ஆட்சியின் நிலைமை என்ன என்பது முடிவுக்கு வரும் என்பது எதிர்கட்சியினுடைய கருத்தாக இருக்கிறது.

தற்போது காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ராகுல்காந்தியின் வருகையின் போது எந்தவித அசம்பாவிதமும் நடக்க கூடாது.

இந்த நிலையில் பிரதமரின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே