விலையிறங்குவாயா வெங்காயமே ?? – கமல்ஹாசன் ட்வீட்..

மழை காரணமாக வரத்து குறைவால் தமிழகம் முவழுவதும் வெங்காய விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

இந்த விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

முதற்கட்டமாக பண்ணை பசுமை கடைகளில் வெங்காயம் கிலோ ரூ.45க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் எகிப்து வெங்காயமும் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த வெங்காயமானது கிலோ ரூ.60க்கு விற்பனையாகி வருகிறது.

இந்த நிலையில் வெங்காய விலை உயர்வு குறித்து மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,  

‘பெரியாரே வந்தாலும் இனி வெங்காயம் என வையார்.

விண்ணில் பறக்கும் வெங்காய விலை பார்த்து நம் அன்னைமார்களும் இனி  சமையலில் அதை வையார்.

விலையிறங்குவாயா வெங்காயமே?,’ எனத் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே