ஜூன் 1ஆம் தேதி முதல் 200 பயணிகள் ரயில் இயக்கம் : ரயில்வே துறை அமைச்சர்

ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து 2-ஆம் வகுப்பு பெட்டிகள் கொண்ட 200 ரயில்கள் நாள்தோறும் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று அறிவித்துள்ளார்.

அட்டவணையின் அடிப்படையில் இயக்கப்படும் அந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவை சீக்கிரமே இணைய வழியில் பதிவுசெய்துகொள்ள முடியும் என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது.

2-ஆம் வகுப்பு Non AC பெட்டிகள் கொண்ட 200 ரயில்களை ஜூன் 1-ஆம் தேதி முதல் எந்த வழித்தடங்களில் இயக்குவதென இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. 

தங்களது சொந்த மாநிலத்துக்கு நடந்து செல்லும் புலம்பெயா்ந்த தொழிலாளா்களை அடையாளம் காணுமாறும், அவா்களது விவரங்களை பதிவு செய்து, மாவட்டத் தலைநகருக்கு அருகிலுள்ள பிரதான ரயில் நிலையங்களில் அவா்களை கொண்டு சோப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளோம். 

விவரங்களை பதிவு செய்த பட்டியலை ரயில்வே அதிகாரிகளிடம் அளிக்கும் பட்சத்தில் அவா்களது பயணத்துக்கான சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்ய இயலும் என்று ரயில்வே துறை தெரிவிக்கிறது.

ஷ்ரமிக் சிறப்பு ரயில் சேவை அடுத்து வரும் நாள்களில் மேலும் பல்வேறு நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று ரயில்வே துறை தெரிவித்திருக்கிறது.

ஒரு நாளைக்கு 400 சிறப்பு ரயில்கள் விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே