தேர்தலில் போட்டியிடுவோருக்கான திமுக விருப்ப மனு விநியோகம் தொடக்கம்..!!

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக திமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பிப்ரவரி 24-ம் தேதி வரை சென்னை தேனாம்பேட்டையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போதைய ஆட்சி வரும் மே மாதம் 24-ம் தேதியுடன் முடிவடையவுள்ளது.

இதனையொட்டி சட்டப் பேரவைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் அரசியல் கட்சியினர் பிரசாரங்களைத் தொடங்கி மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே அதிமுக சார்பில் விருப்ப மனுக்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக திமுகவும் விருப்ப மனுக்களை வழங்கிவருகிறது.

இன்று முதல் பிப்ரவரி 24-ம் தேதி வரை ரூ.1000 செலுத்தி விருப்ப மனுக்களைத் திமுகவினர் பெற்றுச் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே