கிராம பஞ்சாயத்து தலைவர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசிக்கும் பிரதமர் மோடி

கொரோனா கொள்ளை நோய் நமக்கு சுயசார்புதன்மையை போதித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த 1992-ம்ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டு வரப்பட்டது.

இச்சட்டத்தின்படி கிராம அளவில் உள்ளாட்சி அமைப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், தாங்களே நிர்வாகம் செய்யும் உரிமையை பெறுகிறார்கள்.

மத்திய, மாநில அரசுகளின் அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுடன் பகிர்ந்துகொள்வது தான் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது.

பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் இயற்றப்பட்ட நாளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்றிய பிரதமர் மோடி, E-Gram சுவராஜ் வலைப்பக்கம் மற்றும் மொபைல் செயலியை துவக்கி வைத்தார். 

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, கொரோனா தடுப்பு பணியில் ஊராட்சிகளின் பங்கு குறித்து விளக்கம் அளித்தார்.

கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு இடையேயான வளர்ச்சி இடைவெளியை குறைக்க வேண்டும்.

கிராமப்புற சுயாட்சியை உறுதிப்படுத்துவதே இ-கிராம் ஸ்வராஜ் செயலி என்றும் கிராமப்புறங்களின் அடிப்படை கட்டமைப்புகள் பலப்படுத்த வேண்டும் என்றார்.

வலுவான கிராமங்கள் இருந்தால் தான் ஜனநாயகம் பலமாக இருக்கும் என்றும் ஸ்வாமித்வ திட்டம் மூலம் கிராமப்புற சொத்துகளை வரையறுக்க முடியும்.

தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் கிராமங்கள் தற்சார்புடன் இருக்க வேண்டும் தற்போது லட்சக்கணக்கான கிராமங்களில் இணைதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

டிஜிட்டல் மயமாக்களால் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை அதிகரித்து உள்ளது. நெருக்கடியாக சூழல்களில் தான் உண்மையான பாடங்களை நாம் கற்கிறோம்.

நாம் செயல்படும் முறையையே கொரோனா வைரஸ் மாற்றி விட்டதாகவும், கொரோனா நம் அன்றாட வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் நாம் தீவிரமாக இறங்க வேண்டும் என்றார்.

கொரோனா கொள்ளை நோய் நமக்கு சுயசார்புதன்மையை போதித்துள்ளது என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே