#BREAKING : மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழுமுடக்கத்தை நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவு

மதுரையில் வரும் 12-ம் தேதி வரை முழு ஊரடங்கை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மதுரையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் கடந்த 24 தேதி முதல் 5-ஆம் தேதி வரை அங்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில் ஜூலை 6-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை மேலும் 7 நாட்களுக்கு பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சி,பரவை பேரூராட்சி, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, திருப்பரங்குன்றம் ஒன்றியங்களிலும் ஊரடங்கு மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே