திருப்பதி லட்டு விலை உயர்த்தபடமாட்டாது..!

திருப்பதி தேவஸ்தானத்தில் விற்கப்படும் லட்டுகளின் விலை உயர்த்தப்பட மாட்டாது என்று தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி கூறியுள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடாசலபதி கோவிலில் புதிய அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

இதில் பங்கேற்ற சுப்பாரெட்டி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது திருப்பதியில் விற்கப்படும் லட்டுகளின் விலையை உயர்த்த கோரிக்கை மட்டுமே இருந்ததாகவும் ஆனால் நிலையை மாற்றும் எண்ணம் இல்லை எனவும் கூறினார்.

மேலும் தமிழகத்தில் இருந்து திருப்பதிக்கு நடைபயணமாக வரும் பக்தர்களுக்காக ஊத்துக்கோட்டை அருகே தங்கும் விடுதி அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே