மத்திய அரசு மீது கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

அரசின் வீழ்ச்சியை மறைப்பதற்காக, காஷ்மீர் பிரச்னை, அயோத்தி பிரச்னை போன்றவற்றை பா.ஜ.க கையில் எடுத்துள்ளதாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி,  நவம்பர் 30-ம் தேதி டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாபெரும் பேரணி நடைபெறுகிறது.

50 லட்சம் தொண்டர்கள் பங்கேற்கிறார்கள்; தமிழகத்தில் இருந்தும் 50 ஆயிரம் தொண்டர்கள் பங்கேற்கிறார்கள்.

இந்தியப் பொருளாதார வீழ்ச்சி, விவசாயம் நலிவடைவு, இளைஞர்கள் வேலையில்லாத் திண்டாட்டம், பெரும் கம்பெனிகள் எல்லாம் வேலை நாட்களை குறைக்கும் அபாயம் உள்ள நிலையில் மக்களிடம் இருந்து இதனை மறைக்க காஷ்மீர் பிரச்சனை, அயோத்தி பிரச்சனை, மஹாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி என்று பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் இணைந்து மக்களின் எண்ணத்தை மாற்றுகிறது.

பா.ஜ.கவின் தவறான கொள்கைகளை சுட்டிக்காட்டி இந்த மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது.

விக்ரவாண்டி தொகுதியில் ஆளும் அ.தி.மு.க அரசுக்கு சாதகமாக செயல்பட்ட மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதை எல்லாம் தாண்டி வெற்றிப்பெருவதற்காக வழிகள் என்ன?? என்பது குறித்து ஆலோசனை செய்ய உள்ளோம்.

ஐ.ஐ.டி மாணவி பாத்திமா லத்திப் உயிரிழப்புக்கு பின்புலம் யார் இருக்கிறார்கள் ? மத ரீதியிலான துன்புறுத்தல் இருந்ததா என்று ? எல்லாம் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

ஒரு எதிர்க்கட்சி தலைவர், பொறுப்பான அரசியல் கட்சி தலைவர் தான் மு.க.ஸ்டாலின் ஆனால் பஞ்சமி நில விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் தேவையான பதிலை கொடுத்து விட்டார்.

ஆனாலும் ஆளும் அரசு நினைத்தால் யாருக்கு வேண்டுமானாலும் நோட்டிஸ் அனுப்பலாம்.

அதேபோல தான் முரசொலி நிர்வாக இயக்குனருக்கும் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் என்பதால் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுரை கூறியுள்ளோம்.

எந்த இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு பிராகசம் உள்ளது. யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று எல்லாம் ஏற்கனவே அறிவுரை கூறியுள்ளோம்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் பட்சத்தில் தேர்தலுக்கு தயார் என்றார் கே.எஸ்.அழகிரி.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே