5 ரூபாய் டாக்டர் மறைவு… முதல்வர் பழனிசாமி மற்றும் திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் இரங்கல்..!!

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக எருக்கஞ்சேரியிலும், வியாசர்பாடியிலும் தன்னை நாடி வருபவர்களிடம் 5
ரூபாய் வாங்கிக் கொண்டு மருத்துவச் சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் திருவேங்கடம் வீரராகவன் (70) நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார்.

இவரின் மறைவிக்கு முதல்வர் பழனிசாமி மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் இரங்கல்:

5 ரூபாய் டாக்டர் என்று அன்புடன் அழைக்கப்பட்ட திருவேங்கடம் மறைந்த செய்தி வேதனை அளிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 40 ஆண்டுகளுக்கு மேலாக ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் சிறந்த மருத்துவச் சேவையை வழங்கியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார். மருத்துவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், வியாசர்பாடி, எருக்கஞ்சேரி மக்களுக்கு இரங்கல் தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின் இரங்கல்:

திருவேங்கடம் மறைவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள இரங்கல் குறிப்பில் கூறியிருப்பதாவது: ” வடசென்னையில் வெறும் 2 ரூபாய்க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கத் தொடங்கி, தன் வாழ்நாளில் அதிகபட்சமாக 5 ரூபாய் மட்டுமே சிகிச்சைக் கட்டணமாகப் பெற்றவர் மக்கள் டாக்டர் திருவேங்கடம் அவர்கள். எளிய மக்களின் உயிர் காக்கும் அன்பிற்குரிய மருத்துவராக விளங்கிய திருவேங்கடம் அவர்களின் மறைவுக்கு, எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே