பழங்குடியின பெண்களுடன் நடனமாடிய தமிழிசை சவுந்திரராஜன்

தெலுங்கானாவில் பழங்குடியின பெண்களுடன் அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நடனமாடிய காட்சிகள் இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.

தெலுங்கானா ஆளுநர் மாளிகையில் பழங்குடியினர் நலத் துறை அதிகாரிகளுடன் அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனைக் கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக ராஜபவனுக்கு வந்திருந்த பழங்குடியின பெண்களுடன் தமிழிசை கலந்துரையாடினார்.

இதனையடுத்து அவர்களுடன் இணைந்து பழங்குடியின பாரம்பரிய நடனம் ஆடி மகிழ்ந்தார்.

மேள, தாளங்களுக்கு ஏற்றார்போல் பழங்குடியின பெண்கள் தோளில் கை போட்டுக்கொண்டு நடனமாடிய காட்சிகளை தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனை ஏராளமானோர் இணைய தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே