பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் இன்று முன்பதிவு தொடங்குகிறது.
பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு லட்சக்கக்கணக்கானோர் செல்வது வழக்கம்.
60 நாட்களுக்கு முன்பே அரசு விரைவுப் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.
எனவே, இந்த வசதியைப் பயன்படுத்தி பொங்கலுக்கு சொந்த ஊர் செல்வோர், இன்றுமுதல் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
கூட்ட நெரிசலைப் பொறுத்து, பொங்கலையொட்டி அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருநதுகள் இயக்க உள்ளது.
தென்மாவட்ட ரயில்களில் முன்பதிவு முடிந்துவிட்டநிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி, பேருந்துகளில் ஏராளமானோர் முன்பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.