சிறப்பு விருது பெறும் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்திய பொன்.ராதாகிருஷ்ணன்

நடிகர் ரஜினிகாந்தை முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

திரை உலகில் ஆற்றிய பங்களிப்புக்காக மத்திய அரசின் சிறப்பு விருதை பெறும் ரஜினிக்கு பொன்ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்தார்.

தனக்கு மத்திய அரசு அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், அதற்காக மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்-இடம் ரஜினிகாந்த் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே