முதல்வர், துணை முதல்வர் தலைமையில் இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெறவுள்ளது.

தலைமைச் செயலகத்தில் நண்பகல் 12.30 மணிக்கு இக்கூட்டம் நடைபெற உள்ளது.

புதிய தொழில் திட்டங்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் 15 நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதால், சில முக்கியத் திட்டங்களுக்கு அமைச்சரவையின் ஒப்புதல் அளிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே