இந்தியா – வங்கதேச அணிகள் மோதும் 2வது டி20 கிரிக்கெட் போட்டி, குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடக்கிறது.

டெல்லியில் நடந்த முதலாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேசம் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இதற்கு இந்திய அணி பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்துடன் இன்று களமிறங்குகிறது.

அதே சமயம் தொடர்ச்சியாக 2வது வெற்றியுடன் தொடரைக் கைப்பற்றி சாதனை படைக்க வங்கதேசம் வரிந்துகட்டுவதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

போட்டியில் பங்கேற்கும் இரு அணி வீரர்களும் நேற்று தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.

இதனிடையே 100வது டி20 போட்டியில் விளையாடும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே