தமிழகத்தில் வரும் 31-ம் தேதி வரை வார சந்தைகளை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஒன்று கூடலை தவிர்க்கும் நோக்கத்தில் அனைத்து வாரச்சந்தைகளையும் வரும் 31-ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்க வேண்டும் என்பது தமிழக அரசின் உத்தரவு.
சிறிய கடைகள், அங்காடிகளுக்கு இதுவரை தடையேதுமில்லை.
பெரிய அளவிலான வாரச்சந்தைகளுக்குத்தான் 31-ஆம் தேதி வரை மூடுமாறு உத்தரவு வந்திருக்கிறது.
பெரிய நகைக்கடைகள், பெரிய ஜவுளிக்கடைகள், பல்பொருள் அங்காடிகள் நாளை முதல் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா பரவுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.