பரபரப்பான சூழ்நிலையில் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன், பிரதமர் மோடி இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது.
இதனை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
ஊரடங்கு உத்தரவு வரும் 14ஆம் தேதியுடன் நிறைவடை உள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு மாநில முதலமைச்சர்கள் பிரதமர் மோடியை வலியுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி, இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.
அப்போது ஊடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.