சிலிண்டர்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு – இந்தியன் ஆயில் நிறுவனம்

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளாதால், மக்களுக்கு சிலிண்டர்கள் கிடைப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கையும் எடுத்துள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்தியன் ஆயின் நிறுவனம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், சமையல் எரிவாயு பயன்பாட்டை எதிர்கொள்ளத் தேவையான கூடுதலாக 50 சதவிகித எரிவாயுவை கொள்முதல் செய்ய உள்ளதாக முடிவு செய்துள்ளோம்.

எத்தகைய சூழ்நிலையிலும், மக்களின் தேவைகளைச் சமாளிக்க எல்.பி.ஜி பிளாண்ட்களில் ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் கூட ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

இன்றைய தேதி வரை 26 லட்சம் சிலிண்டர்கள் வரை சப்ளை செய்யப்பட்டுவருவதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் தெரிவித்துள்ளது.

மேலும் மக்கள் யாரும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் எனப் பயப்பட வேண்டாம்.

இதனால் அவசர அவசரமாக யாரும் புக் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே