அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை நிகழ்வின் அடையாளமாக சிறப்பு தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டிய பிறகு மேடையில் பிரதர் மோடி உரையாற்றி வருகிறார். அதில் பேசிய பிரதமர் , அயோத்தி வழக்கின் தீர்ப்பை தொடர்ந்து இந்தியர்கள் மனதில் நல்லிணக்கத்தை கொண்டு செயல்பட்டனர்.
அயோத்தி ராமர் கோயில் ஒற்றுமைக்கு ஒரு பாலமாக அமையும். ஒரு கட்டத்தில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவோம் என யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்கமாட்டார்கள். பல தலைமுறையாக பலர் ராமர் கோயிலுக்காக பல்வேறு தியாகங்களை செய்துள்ளனர்.
ராமர் கோயிலுக்காக லட்சக்கணக்கான இந்தியர்கள் களத்தில் இறங்கி போராடினர். இந்தியர்களின் தியாகம், போராட்டம் காரணமாக ராமர் கோயில் எனும் கனவு நனவாகியுள்ளது. உண்மையில் உறுதியாக இருக்க வேண்டும் என ராமர் நமக்கு போதித்துள்ளார்.
சின்னசிறு உயிர்களிடம் இருந்து கூட ராமர் உதவிகளை பெற்றுக்கொண்டார். ராமர் கோவிலுக்காக போராடிய அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
நமது கலாச்சாரத்தின் சமகால அடையாளமாக ராமர் கோவில் இருக்கும், இந்த பூமி பூஜை விழாவில் கலந்து கொண்டது மன திருப்தியை ஏற்படுத்தி உள்ளது.அயோத்தியில் அமைக்கப்பட உள்ள ராமர் கோயில் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும்” என உரையாற்றினார்.