விசாகப்பட்டினம் விஷவாயு சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ 1 கோடி நிவாரணம்..

விசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் விஷவாயுக் கசிவு விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்ப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ஆர்.ஆர். வெங்கடாபுரத்தில் உள்ள எல்.ஜி. பாலிமர்ஸ் தொழிற்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை விஷவாயு கசிவு ஏற்பட்டது.

இந்த விஷவாயு அங்கு சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு பரவியதால் சுற்றுவட்டாரத்தில் உள்ள 5 கிராமங்களுக்குப் பரவியது. இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8-ல் இருந்து 13 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் நூற்றுக்கணக்கானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ஆலை இருக்கும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் குழந்தைகள், பெண்கள் உள்பட ஆயிரத்துக்கும் அதிகமானோர் மயக்கம், மூச்சுத் திணறல், கண் எரிச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘விஷவாயுக் கசிவு விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்ப்படும்.

மேலும், பாதிக்கப்பட்டோருக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படும்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு தேவையான உதவியைச் செய்யும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே