தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நாளை தொடக்கம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை தொடங்கும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 7,276 பள்ளிகளை சேர்ந்த 8,16,359 மாணவர்கள் மற்றும் 19,166 தனித்தேர்வுகள் எழுத உள்ளனர்.

3,74,747 மாணவர்கள், 4,41,612 மாணவிகள், 2 திருநங்கைகள் உட்பட மொத்தம் 8,35,525 பேர் எழுதுகின்றனர். 

3,012 தேர்வு மையங்களில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி 15 நிமிடங்கள் வரை தேர்வு நடைபெறும். 15 நிமிடங்கள் கேள்வித் தாள்களை படிக்க ஒதுக்கப்பட்டுள்ளது. 

புதிய பாடத்திட்டத்தில் மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள். 

தேர்வில் அறை கண்காணிப்பாளர் பணியில் 42,000 ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். 

முறைகேடுகளை தடுக்க 4,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

மாணவ மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே